'மாஸ்டர்' ரிலீஸ் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ: விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!

  • IndiaGlitz, [Wednesday,December 02 2020]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் சமீபத்தில் தயாரிப்பாளர் உறுதிபடக் கூறி உள்ள நிலையில் தற்போது ’மாஸ்டர்’ ரிலீஸ் குறித்து பாசிட்டிவான கருத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது

இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளித்து வாழ்த்தினார்

அதன் பின்னர் அவர் பேசியபோது ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே தமிழகத்தில் கொரோனாவே இல்லாமல் போகும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

மேலும் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்றினால் டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தை விட்டு கொரோனா ஓடிப் போகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ’மாஸ்டர்’ படம் குறித்த பாசிட்டிவான கருத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளது கோலிவுட் திரையுலகினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

More News

புரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ்க்கு கிரீன் டீ, டார்க் சாக்லேட் எல்லாம் கூட மருந்தா??? புது விளக்கம்!!!

கொரோனா வைரஸில் இருக்கும் ஒரு முக்கிய நொதி (Enzyme) செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் சில உணவுகள் இயற்கையாகவே ரசாயன சேர்மானங்களை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி சிலருக்கு மட்டும் தானா??? மத்திய அரசின் சர்ச்சை கருத்து!!!

நேற்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன், ஒட்டுமொத்த

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா: நடராஜன் குறித்து பிரபல நடிகர்!

இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

ஆவின் பாலில் சர்க்கரைத் தண்ணீர் கலந்து மோசடி… வெளியான அதிர்ச்சி வீடியோ!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆவின் பால் நிறுவனத்திற்கு அனுப்பப்படும் பசும்பாலில் அம்மாவட்டத்தின் கூட்டுறவு சங்கத் தலைவரே சர்க்கரைத் தண்ணீர் கலந்து அனுப்புவது

கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழைகிறதா??? பதைக்க வைக்கும் தகவல்!!!

தற்போதுவரை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு பற்றிய அச்சம் இல்லாமலே பெரும்பாலான பொதுமக்கள் இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கி விட்டனர்.