100% இருக்கைகள் அனுமதி ரத்தாகுமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்!

  • IndiaGlitz, [Friday,January 08 2021]

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர்களின் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அனுமதிக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 100% இருக்கைகள் அனுமதி வாபஸ் பெறப்பட்டு மீண்டும் 50 சதவீத இருக்கைகள் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள், ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் சினிமா துறையினரின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக முதல்வர் அனுமதி அளித்தார்

ஆனால் தற்போது மத்திய அரசு சில ஆலோசனைகளை கூறியுள்ளனர். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி குறித்து உரிய முடிவை எடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்

எனவே திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதி குறித்து விரைவில் தமிழக அரசிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது