கட்டிப்பிடி வைத்தியதால் காவிரி வருமா? கமலை கிண்டல் செய்த அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Tuesday,June 05 2018]

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து காவிரி நீர் குறித்து ஆலோசனை செய்தார். இந்த சந்திப்புக்கு தமிழக அரசியல்வாதிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களிடம் கருத்து கூறிய தமிழக அமைச்சர் ஜெயகுமார், 'காவிரி விவகாரம் தொடர்பாக கமல் அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல், சினிமா பாணியில் நடந்து கொள்கிறார். நீண்டகால சட்டப்பேராட்டம் காரணமாக மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இனி நீரை திறக்கும் அதிகாரம் ஆணையத்திடம் மட்டுமே இருக்கும்.

இந்த அடிப்படை கூட தெரியாமல் கமல் உள்ளார். வசூல்ராஜா பட பாணியில் கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால் காவிரியில் தண்ணீர் வந்துவிடுமா? என்று கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

More News

மாணவி பிரதீபா தற்கொலை: ரஜினிகாந்த் இரங்கல்

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட விழுப்புரம் மாணவி பிரதீபாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தோல்வி எதிரொலி: மேலும் ஒரு மாணவர் மரணம்

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மகனுக்கு வாழ்த்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகன் அமீன், 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'புதிய மனிதா' உள்ளிட்ட ஒருசில பாடல்கள் பாடியுள்ளார். தந்தையை போலவே இசைத்துறையில் ஆர்வம் உள்ள அமீன், படிப்பிலும் சிறந்தவர்

நீட் தேர்வு தோல்வி எதிரொலி: விழுப்புரம் மாணவி தற்கொலை

கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவிக்கு தேசிய அளவில் 12வது இடம்

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று பிற்பகல் இந்த தேர்வின் முடிவுகள் வெளியானது.