ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தார் அமைச்சர் ஜெயகுமார்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான அரசியல் கட்சிகளின் போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ரஜினியின் இந்த டுவீட்டுக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு தெரிவித்துள்ளார். வன்முறை கலாச்சாரத்தை கிள்ளி எறியவேண்டும் என்ற ரஜினிகாந்த் கருத்து வரவேற்கத்தக்கது என்றும், அன்புச்சகோதரர் ரஜினியின் கருத்தை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வன்முறையை எந்த நிலையிலும் ஏற்க முடியாது என்றும் வன்முறையால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ரஜினியின் டுவீட் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் கூறியதாவது: பொதுமக்களைப் பாதிக்கும் அளவிற்கு..சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் அளவிற்கு...நடந்து கொள்ளும் வன்முறையாளர்களை ரஜினிகாந்த் எதிர்த்திருப்பது...சரியானதே....என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com