ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தார் அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான அரசியல் கட்சிகளின் போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த டுவீட்டுக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.  வன்முறை கலாச்சாரத்தை கிள்ளி எறியவேண்டும் என்ற ரஜினிகாந்த் கருத்து வரவேற்கத்தக்கது என்றும், அன்புச்சகோதரர் ரஜினியின் கருத்தை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வன்முறையை எந்த நிலையிலும் ஏற்க முடியாது என்றும் வன்முறையால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில் ரஜினியின் டுவீட் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் கூறியதாவது: பொதுமக்களைப் பாதிக்கும் அளவிற்கு..சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் அளவிற்கு...நடந்து கொள்ளும் வன்முறையாளர்களை ரஜினிகாந்த் எதிர்த்திருப்பது...சரியானதே....என்று கூறியுள்ளார்.
 

More News

உலகின் அதிக பார்வையாளர்களை பெற்ற யூடியூப் வீடியோ திடீர் மாயம்

யூடியூப் இணையதளத்தில் உலகிலேயே அதிக பார்வையாளர்கள் பார்த்த வீடியோக்கள் Vevo யூடியூப் அக்கவுண்டில்தான் உள்ளது. இதில் உள்ள மியூசிக் வீடியோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே

வன்முறையின் உச்சகட்டமே இதுதான்: ரஜினிகாந்த்

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர்.

போயிறுவியா என் ஏரியாவ தாண்டி: சிஎஸ்கே வெற்றி குறித்து ஹர்பஜன்சிங் 

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 203 என்ற இலக்கை விரட்டியடித்து வெற்றி பெற்ற சென்னை அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

சீமான் அவர்களே நீங்கள் செய்வது தவறு! தாக்கப்பட்ட தோனி ரசிகர் ஆவேசம்

சென்னை மற்றும் கொல்கத்தா அணியின் ஐபிஎல் போட்டியை பார்க்க வந்த தோனியின் தீவிர ரசிகர் சரவணன், தனது உடல் முழுவதும் மஞ்சள் பெயிண்டை அடித்து கொண்டு நெஞ்சில் தோனி என்ற எழுத்துடன் போட்டியை பார்க்க சென்றார்.

தோனி மகளுடன் போஸ் கொடுத்த ஷாருக்கான்

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா போட்டியில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் போட்டி முடியும் வரை மைதானத்தில் போட்டியை ரசித்து பார்த்தார்.