எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயகுமார் விளாசல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் தமிழக கவர்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஆனால் இதற்கு கவர்னர் அந்த பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டதும், கவர்னரின் மன்னிப்பை அந்த பெண் நிருபர் ஏற்றுக்கொண்டதுடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனால் முடிந்து போன இந்த பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து விட்டு பின்னர் கிளம்பிய பயங்கர எதிர்ப்பால் அந்த கருத்தை டெலிட் செய்துவிட்டு மன்னிப்பும் கேட்டார் நடிகர் எஸ்.வி.சேகர்.
அதேபோல் கருணாநிதி, கனிமொழி குறித்து தனது டுவிட்டரில் சர்ச்சை கருத்தை தெரிவித்துவிட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்து கொண்டார் சர்ச்சை நாயகன் எச்.ராஜா
இந்த நிலையில் இவர்கள் இருவர் குறித்து அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'எஸ்வி சேகர் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவதூறு கருத்து தெரிவித்தவர்கள் மீது பத்திரிகையாளர்கள் புகார் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதேபோல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வரும் எச்.ராஜா மீது புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எஸ்.வி. சேகர், எச். ராஜா ஆகிய இருவரும் இழிவாக பேசுவதை ஏற்க முடியாது. என்றும், இந்த இரண்டு சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து என்று கூறிய ஜெயகுமார், இவர்கள் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை என்றால் அரசே இவர்கள் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments