நடிகர் விஜய் திமுகவில் சேர்ந்தால்.... அமைச்சர் ஜெயகுமார் பேட்டி!
- IndiaGlitz, [Wednesday,September 04 2019]
நடிகர் விஜய் இதுவரை எந்த ஒரு மேடையிலும் தான் அரசியலில் சேருவதாகவோ, ஏதாவது அரசியல் கட்சியில் இணைய விரும்புவதாகவோ கூறியதே இல்லை. ஆனாலும் ஒரு சில அரசியல்வாதிகள் அவர் அரசியலுக்கு வருவாரா? ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் சேருவாரா ?என்பது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சில ஊடகங்களும் விஜய் எந்த கட்சியில் சேருவார்? போன்ற கேள்விகளை அரசியல்வாதிகளிடம் எழுப்பி வருகின்றனர்
சமீபத்தில் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், 'விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று கூறினார். இதுகுறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார், 'விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறினார்
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் 'நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் கூறினார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் விஜய் சந்தித்ததை அடுத்து செய்தியாளர்கள் அவரிடம் இந்த கேள்வியை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது
நடிக விஜய்க்கு இதுவரை அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணமே இல்லாத நிலையில் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அவரை தூண்டிவிட்டு அவரை உண்மையிலேயே அரசியலுக்கு வரவழைத்துவிடுவார்கள்' என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்