ரஜினி அப்படியே சொல்லவே இல்லை: அமைச்சர் ஜெயகுமார்
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகின்றன. குறிப்பாக மாணவர்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் ஒரு பக்கம் நடந்து வந்தாலும், இன்னொரு பக்கம் வன்முறையாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு சில இடங்களில் அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து கருத்து கூறிய நடிகர் ரஜினிகாந்த், ’எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது என்றும் தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனை அளிக்கிறது’ என்று கூறியிருந்தார்.
ரஜினியின் இந்த கருத்தை சீமான் உள்பட பல அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் கருத்து குறித்து இன்று பேட்டி ஒன்றில் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’வன்முறை தீர்வாகாது என்று தான் நடிகர் ரஜினிகாந்த் கூறினார், போராட்டமே தேவையில்லை என்று கூறவில்லை என்று விளக்கமளித்தார். இதனை அடுத்து ரஜினியின் கருத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments