விஜய் பேச்சுக்கெல்லாம் அதிமுக அஞ்சாது: அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Monday,September 23 2019]

சமீபத்தில் நடைபெற்ற 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய ஒரு 15 நிமிட பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 நாட்களாக பல ஊடகங்களில் இது குறித்த விவாதங்களும், தலைப்புச் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் நேற்று இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது

இதில் விஜய் பேசிய முழு பேச்சையும் அனைவரும் கேட்க நேர்ந்தது. விஜய் தன்னுடைய பேச்சில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் எதுவும் பேசவில்லை என்பது நடுநிலையாளர்களுக்கு நன்றாக புரிந்தது. ஆனால் விஜய்யின் பேச்சை உள்ளர்த்தமாக எடுத்துக் கொண்டு பல அரசியல்வாதிகள் தங்களை தான் விஜய் விமர்சனம் செய்ததாக எண்ணி, பதிலடி கொடுத்து வருகின்றனர்

ஏற்கனவே ஒரு சில அதிமுக அமைச்சர்களும் பாஜகவினர்களூம் விஜய்யின் பேச்சுக்கு கருத்து கூறிய நிலையில் தற்போது அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: விஜய் போன்றவர்கள் முதலீடு செய்த பணத்தை எடுப்பதற்கும் படத்தை நீண்ட நாட்கள் ஓட்டுவதற்கும் அதிமுகவை விமர்சனம் செய்து வருவதாகவும், ஆனால் அதிமுக அதற்கெல்லாம் அஞ்சாது என்றும் எதையும் எதிர்த்து நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார் அஞ்சாது, எதிர்த்து நிற்கும் என்று கூறும் அளவுக்கு கூறுமளவுக்கு விஜய் அப்படி என்னதான் பேசினார் என்பதே பலருடைய கேள்வியாக உள்ளது

More News

சேரன் வெளியேறியதால் கடுப்பான கஸ்தூரி: 

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஷெரின் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பல ஊடகங்களில் செய்தி வந்த நிலையில் நேற்று ஷெரின் முதல் நபராக காப்பாற்றப்பட்டது

தோண்டி துருவாமல் படத்தை ரசியுங்கள்: காப்பான் விமர்சகர்களுக்கு விக்னேஷ் சிவன் கண்டனம்

கடந்த வெள்ளியன்று வெளியான சூர்யாவின் காப்பான் திரைப்படம் ஊடகம் மற்றும் விமர்சகர்களின் கலவையான விமர்சனங்களையும் தாண்டி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது 

முடிவுக்கு வந்த சந்தானம் நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ள நிலையில், தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

ஷெரினுக்காக காரசாரமான ரிஸ்க் எடுக்கும் தர்ஷன்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சேரன் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் தற்போது கவின், முகின், தர்ஷன், ஷெரின், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய 6 பேர்கள் மட்டுமே உள்ளனர் 

இடைத்தேர்தலில் போட்டி இல்லை: கமல்ஹாசன் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன.