ரஜினி எந்த கட்சியின் வாக்குகளை பிரிப்பார்: அமைச்சர் ஜெயகுமார் தகவல்

  • IndiaGlitz, [Sunday,December 23 2018]

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பின் ரஜினி, கமல் என இரண்டு திரையுலக பிரபலங்கள் அரசியலில் குதித்துள்ளனர். வரும் பாராளுமன்ற தேர்தலை இருவரும் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் இருவரும் எந்த கட்சிகளின் வாக்குகளை பிரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், 'ரஜினி, கமல் தேர்தலில் போட்டியிட்டாலும் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என்று தெரிவித்தார்

மேலும் ரஜினியால் அதிமுகவின் வாக்குகளை பிரிக்க முடியாது என்றும், திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வாக்குகளைதான் ரஜினி பிரிப்பார் என்றும், அதேபோல் ரஜினி தொலைக்காட்சி தொடங்கினால் திமுகவுக்குதான் பாதிப்பு அதிகம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.