கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க வேண்டுமா? அமைச்சர் ஜெயகுமார்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார். அவருடைய ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என போலீசார் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், 'கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக ஏன் நீடிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டவிதிகளை மீறி பேசக்கூடாது என்றும் பல்வேறு சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கருணாஸை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதேபோல் சாதி, மத கலவரங்களை உருவாக்கும் விதத்தில் யார் பேசினாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout