கட்டெறும்பு சிற்றெறும்பாகி காணாமல் போகும் கமல் கட்சி: அமைச்சர் ஜெயகுமார் 

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை மதுரையில் பிரமாண்டமான கூட்டம் ஒன்றில் ஆரம்பித்தார். அதன்பின்னர் சென்னை, திருச்சியில் இரண்டு பிரமாண்டமான பொதுக்கூட்டத்தையும் நடத்தினார். மேலும் வரும் மே மாதம் கோவையிலும் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி ஆன்லைன் மூலம் நேரிலும் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இளைஞர்கள் பலர் கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சி குறித்து இன்று பேட்டி ஒன்றில் கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'கட்டெறும்பு சிற்றெறும்பாகி பின்னர் காணாமல் போகும் கட்சிதான் கமல் கட்சி என்று கூறியுள்ளார். மேலும் உலகிலேயே கட்சி ஆரம்பிக்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே தலைவர் கமல்ஹாசன் தான் என்றும், கமல்ஹாசன் மாடியில் இருந்து பார்க்கும் தலைவர் என்றும், அவருக்கு மக்கள் பிரச்சனை புரியாது என்றும் கூறினார்.

More News

ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய முக்கிய தகவல்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'மெர்க்குரி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கும் நிலையில்

எரிந்த நிலையில் பிரபல டிவி நடிகை: கொலையா? தற்கொலையா?

கேரளாவை சேர்ந்த டிவி நடிகை கவிதா என்பவர் அவருடைய வீட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததால் கேரள டிவி நடிகர் நடிகைகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

கமல் கட்சியில் இருந்து விலகிய பிரபலம்: மேலும் சிலர் விலகுவதாக தகவல்

நடிகர் கமல்ஹாசன் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான ராஜசேகர் இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மன்சூர் அலிகான் ஜாமீன் மனு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை விசாரணை செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மும்பை ஆசிரமத்தில் ஒரு மாதம் இருந்தாரா நிர்மலாதேவி?

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் நிர்மலாதேவி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர்