கமல் யாருக்கும் உதவாத ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை: அமைச்சர் ஜெயகுமார்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது முதல் அரசியல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் அவருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு ஆச்சரியமளிப்பதாக அரசியல் விமர்சகர்களே கருத்து கூறி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வராதா? என ஏங்கிய மக்களுக்கு கமல் ஒரு நம்பிக்கையை தந்துள்ளதாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் கமலின் அரசியல் பயணம் குறித்து கருத்து கூறிய தமிழக அமைச்சர் ஜெயகுமார், எங்களை எதிர்ப்பவர்கள் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலை இருப்பதால் கமல் எங்களையும் எங்கள் ஆட்சியையும் குறை கூறுகின்றார். எங்களை எதிர்த்தால் அவர் மக்கள் மத்தியில் தெரிவார். கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை; மரபணு மாற்றப்பட்ட விதை யாருக்கும் பயன்படாது. இந்தியாவில் அதை விதைப்பதில்லை' என்று கூறினார்
மேலும் அதிமுகவுக்கு என்றுமே எதிரியாக கட்சி திமுக. இருந்தாலும் கமல் குறித்து ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நான் உடன்படுகிறேன். கமல் ஒரு காகிதப்பூதான். அந்த பூ மலரவும் செய்யாது, மணமும் கொடுக்காது' என்று கூறினார்.
ஜெயகுமாரின் இந்த கருத்துக்கு இன்று மாலை கமல் தன்னுடைய முதல் அரசியல் மேடையில் பதில் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout