கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டார்: அமைச்சர் ஜெயகுமார்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், சமீபத்தில் அளித்த பேட்டியில் தங்கள் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் தெரிவித்தார்.
எந்த ஒரு புதிய அரசியல் கட்சியும் பொதுத்தேர்தலை சந்திக்கும் முன் இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை ஆழம் பார்க்க இடைத்தேர்தலை பயன்படுத்தி கொள்வதுண்டு. ஆனால் கமல்ஹாசனின் முடிவு வித்தியாசமாக இருந்ததால் அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், 'நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவோம் என்று சொன்னால்தான் அது விஷயம். போட்டியிடவில்லை என்று சொன்னால் விஷயமே இல்லை. தேர்தல் என்றால் கமல்ஹாசனுக்கு பயம். எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதில்லை' என்று கூறினார்.
அதேபோல் விஷால் அரசியல் குறித்து அவர் கூறியபோது, 'அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம். இதில் யார் வேண்டுமென்றாலும் டம்ளரில் தண்ணீர் எடுத்து குடிக்கலாம். அதில் நடிகர் விஷால் தண்ணீர் எடுத்து குடிப்பதற்கு நாங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல நடிகர் விஷால் அதிகாரம் பெற்றவர் கிடையாது' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments