காலா போன்ற காளான்கள் காணாமல் போகும்: அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Wednesday,May 09 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திரையுலகை சேர்ந்த சிலரும், அரசியல்வாதிகளும் கடந்த சில மாதங்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே. குறிப்பாக தமிழக அமைச்சர் ஜெயகுமார் அவ்வப்போது ரஜினியை விமர்சனம் செய்ய தவறுவதில்லை

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் இன்று வெளியாகியுள்ள ரஜினியின் 'காலா' படத்தின் பாடல்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 'காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் என்றும் திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார். மேலும்  காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் * எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் மது, புகை பிடித்தது கிடையாது  என்றும் அவரை போல் மற்ற நடிகர் இருக்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அமைச்சரின் இந்த கருத்துக்கு இன்று நடைபெறும் 'காலா' இசைவெளியீட்டு விழாவில் ரஜினி பதிலளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்