ராயபுரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அமைச்சர் ஜெயகுமாரின் அதிரடி நடவடிக்கை!
- IndiaGlitz, [Friday,May 22 2020]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ நெருங்கி விட்டது அதிலும் குறிப்பாக ராயபுரத்தில் இன்று சென்னை மாநகராட்சி அளித்த தகவலின்படி 1697 கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழக அரசு ராயபுரத்தில் தீவிர கவனம் செலுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது
இந்த நிலையில் ராயபுரம் தொகுதி எம்எல்ஏவும் மீனவளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் அவர்கள் ராயபுரம் மக்களை கொரோனாவில் இருந்து காப்பதற்காக இலவசமாக மாத்திரைகள் வழங்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
இராயபுரம் மண்டலத்தில் கொரோனா நோயின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நன்மை கருதி ரூபாய் 25 மதிப்புள்ள மாத்திரைகளை ராயபுரத்தில் உள்ள 12 அம்மா உணவகங்களில் என் சொந்த செலவில் வழங்குகிறேன். அங்கு இந்த மருந்தை கேட்டு வாங்கி உட்கொண்டு கொரோனா நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிறகாவது ராயபுரத்தில் கொரோனாவின் தாக்கம் குறையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்