'பிகில்', 'திகில்' யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்: அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Wednesday,October 23 2019]

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை காண விஜய் ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பு ரசிகர்களூம் மிகவும் ஆவலுடன் உள்ளனர்

இந்த நிலையில் சென்னை உள்பட பெருநகரங்களில் இந்த படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என தெரிகிறது. தமிழக அரசு இன்னும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்காத நிலையிலும் இந்த காட்சிகளுக்கு உரிய டிக்கெட்டுகளை திரையரங்கு உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்

இந்த நிலையில் சிறப்பு காட்சிகளுக்கு அதிக கட்டணம் வாங்குவதால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனால்தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கூறியிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்

இதற்கு முன் பல திரைப்படங்கள் அதிகாலை காட்சி திரையிடப்பட்டபோது, அந்தப் படங்களுக்கும் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து தான் டிக்கெட் வாங்கினார்கள் என்றும், அப்போதெல்லாம் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு தற்போது விஜய் படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் இந்த நடவடிக்கையை எடுப்பது ஏன்? என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்