நயன்தாராவுக்கு திமுகவின் உறுப்பினர் அட்டை: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்!

 

கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் திமுக-வில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் 72 லட்சம் பேர் திமுகவில் உறுப்பினராக இணைந்து உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ’ஒரே நாளில் 72 லட்சம் பேர்களை ஒரு கட்சியில் எப்படி சேர்க்க முடியும்? ஓசாமா பின்லேடன், டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டவர்களை கொண்டு திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது ஒரு ஏமாற்று வேலை. இதன் அனைத்துப் பெருமையும் பிரசாந்த் கிஷோர் அவர்களையே சேரும் என்று கூறினார்.

மேலும் ’திமுகவின் குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம். அதை நான் ஒன்றும் சொல்லவில்லை’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலுடன் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை ராதாரவி, மறுநாளே திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் என்பதும் தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.