கட்சி தொடங்க யாராவது தொண்டர்களிடம் பணம் கேட்டதுண்டா? அமைச்சர் ஜெயக்குமார்

  • IndiaGlitz, [Tuesday,November 07 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ரசிகர்கள் முன் பேசியபோது 'நான் கட்சி தொடங்க எனக்கு என் ரசிகர்கள் பணம் கொடுப்பார்கள், அவர்களே என் தொண்டர்கள். அவர்கள் இருக்கும்போது எனக்கு கவலை எதற்கு? என்று கூறினார். கமல்ஹாசனின் இந்த கூற்றுக்கு சற்றுமுன்னர் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். 

கட்சி தொடங்குவதற்காக தொண்டர்களிடம் யாரும் பணம் கேட்டது இல்லை. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்; ஆனால் இறுதி எஜமானர்கள் மக்கள் தான். அன்றும், இன்றும், நாளையும் எம்ஜிஆர், ஜெயலலிதா பக்கமே மக்கள் உள்ளனர்' என்று கூறியுள்ளார்

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் கமல் அரசியல் வருகை குறித்து கூறியபோது, 'கமல் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்; மாற்றம் ஏற்படுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என்று கூறினார்.

ஏற்கனவே திருமாவளவன், வாசன், விஜயகாந்த் உள்பட பல அரசியல் தலைவர்கள் கமலின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பொதுமக்களும் வானிலையை கணிக்கலாம்: தமிழ்நாடு வெதர்மேன்

ஒரு காலத்தில் வானிலை அறிக்கை என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வரும் பெயர் ரமணன் அவர்கள் தான். மழைக்காலத்தில் அவர்தான் மக்களின் ஹீரோவாக இருந்தார்.

பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசனின் புதிய குடும்ப உறுப்பினர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்று 63வது பிறந்த நாள் என்பதால் அவருக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஜனவரி முதல் ஒவ்வொரு அறிவிப்பாக வரும்: அரசியல் வருகை குறித்து கமல் பேட்டி

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை அடுத்து தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கமல் அறிமுகம் செய்துள்ள விசில்: இன்று முதல் ஆரம்பம்

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு செயலி ஆரம்பிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி அவர் சற்றுமுன்னர் அந்த செயலியை அறிமுகம் செய்துள்ளார்

தமிழறிஞர், பேராசிரியர் மா.நன்னன் காலமானார்

ஒரு காலத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அனைவருக்கும் தமிழ் கற்று கொடுத்த தமிழறிஞர் மா.நன்னன் அவர்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.