"புகார் கொடுங்க.. H.ராஜாவையும் கைது செய்கிறோம்"..! அமைச்சர் ஜெயக்குமார்.
Send us your feedback to audioarticles@vaarta.com
நெல்லை மேலப்பாளையத்தில் டிசம்பர் 29ஆம் தேதி குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சி ஒருங்கிணைத்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நெல்லைக் கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டார். அவரைக் கைது செய்ய பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக நேற்று இரவு பெரம்பலூரில் கைது செய்யப்பட்டு நெல்லை அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் நெல்லை கண்ணன் கைது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொடர்பான நெல்லை கண்ணனுடைய பேச்சின் ஆழம் பார்த்தே அவரை கைது செய்துள்ளனர்” என்று கூறினார். நெல்லை கண்ணனின் பேச்சுகள் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் இதற்கு முன்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோரை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் அதிகளவில் வலம் வருகிறது.
குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் குறித்து பேசிய ஹெச்.ராஜா, கல்லூரி வளாகத்துக்குள் குண்டு வீசுவோம் என்றார். அவரது இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கல்லூரிக்குள் குண்டு வீசுவேன் என்று ஹெச்.ராஜா கூறிய கருத்து தொடர்பாக உரியவர்கள் புகார் அளித்தால் அது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments