மான, ரோஷம் உள்ளவரா நீங்கள்? தமிழ் நடிகரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயகுமார்
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்த நிலையில் திடீரென புதிய கல்விக் கொள்கை காரணமாக இரு தரப்பு தலைவர்களும் சமூக வலைதளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என்றும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும் தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்தது பாஜக தலைவர்களை அதிருப்தி அடைய செய்தது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் வீடியோ ஒன்றில் கூறியபோது, ‘அதிமுகவிலிருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள். அட்லீஸ்ட் திரும்ப நீங்க வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லன்னா கிடைக்கவே கிடைக்காது. ஏனென்றால் எல்லாம் பார்த்தாச்சி. எல்லாமே நீங்க தி.மு.க. ஸ்டாண்டத்தான் எடுக்குறீங்க. பிராமணர்களுக்கு எதிரான நிலைப்பாடு. EWS பத்து பர்சன்ட் கொடுக்க மாட்டேன் எனச் சொல்வது, அதற்கு சர்டிபிகேட் கொடுக்க மாட்டேன் எனச் சொல்வது. என்ன எனக்குப் புரியல. நீங்க என்ன அம்மா ஆட்சி நடத்துறீங்கன்னு சொல்றீங்க'' என கூறியிருந்தார்.
எஸ் வி சேகர் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’எஸ்வி சேகர் மான ரோசம் உள்ளவராக இருந்தால் அதிமுக எம்எல்ஏவாக அவர் ஐந்து ஆண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் பென்ஷனை திருப்பித் தரவேண்டும். எஸ்வி சேகர் தருவாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதிமுக குறித்து எஸ்வி சேகரின் கருத்தும் அதற்கு பதிலடி கொடுத்த அமைச்சரின் கேள்வியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments