சமூக அக்கறை வேண்டும்: விஜய்க்கு அமைச்சர் ஜெயகுமார் அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' பட்த்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த மாதம் 21ஆம் தேதி வெளிவந்தது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் வகையில் இருந்ததால் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர்களுக்கு அனுப்பிய நோட்டீஸை அடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், 'எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் புகை, மது காட்சிகள் இல்லாதவாறு பார்த்து கொள்வார். அதேபோல் நடிகர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். லாப நோக்கத்திற்காக மட்டும் திரைப்படங்களில் நடிக்க கூடாது. சிகரெட் பிடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது, சிகரெட் பிடிக்காமல், மது அருந்துதல் போன்ற காட்சிகள் அமைப்பது சமுதாயத்திற்கு சீர்கேடாக அமைகிறது. என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout