தீயை அணைக்கும் செலவை சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திடம் வசூலிக்கப்படும். அமைச்சர் ஜெயக்குமார்

  • IndiaGlitz, [Wednesday,May 31 2017]

சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 15 மணி நேரமாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர். கடைசி கட்டமாக கட்டிடத்தின் முன்பகுதியில் துளையிட்டு அதன் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. எனவே இன்று இரவுக்குள் தீ கட்டுப்படுத்தப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் தீயணைப்பு பணியை தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்ட ஆட்சி தலைவர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சற்று முன் நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தி.நகருக்கு நேரில் சென்று தீ அணணக்கும் பணியை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தீயை முழுமையாக அணைத்த பிறகுதான் கட்டடம் விதியை மீறிக் கட்டடப்பட்டதா என ஆய்வு செய்யப்படும். அந்த கட்டடம் விதியை மீறி கட்டப்பட்டிருந்தால் நிச்சயமாக கட்டிடத்தின் உரிமையாளர் மீதும், கட்டிடத்திற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்த தீவிபத்தால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக இந்த பகுதி மக்கள் பாதிக்கபப்ட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தீயை அணைக்க ஆகும் செலவு கணக்கிடப்பட்டு சென்னை சில்க்ஸ் கடை நிர்வாகத்தினர்களிடம் வசூல் செய்யப்படும்' என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

மேலும் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. தீ அணைக்கப்பட்டவுடன் கட்டிடத்தின் உறுதித்தன்மை சோதனை செய்யப்பட்டு தேவைப்பட்டால் கட்டிடத்தை இடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறினார்.

More News

தமிழகத்தை ஆளும் தகுதி தமிழனுக்கு மட்டுமே உண்டு. ரஜினிக்கு பாரதிராஜா மறைமுக எச்சரிக்கை

சமீபத்தில் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி சென்னை மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார்...

சினிமாத்தனம் இல்லாத போலீஸ் கேரக்டரில் பிரபல இயக்குனர்

அறிமுக இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி வரும் 'களவு' படத்தில் முதன்முறையாக பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு...

பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை! ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி

இறைச்சிகாக மாடுகள் உட்பட ஒருசில கால்நடைகளை விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு சமீபத்தில்

முடிவடையும் நிலையில் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம்

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்து தனுஷ் நடிப்பில் விரைவில்...

அனுஷ்கா பயன்படுத்திய கேரவனை பறிமுதல் செய்த போலீஸார்

'பாகுபலி', 'பாகுபலி 2' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்த முன்னணி நடிகை அனுஷ்கா தற்போது...