மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு: மத்திய அமைச்சர் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கு இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கடிதம் எழுதிய நிலையில் இந்த கடிதம் எழுதிய 49 பேர் மீது சமீபத்தில் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இதுகுறித்து திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இயக்குனர் பாரதிராஜா மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இந்த வழக்கை வாபஸ் பெறும்படி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளதாகவும், சில சிறிய கூட்டங்கள் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி வருவதாகவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout