விஜய்யின் இரவு பாடசாலை.. அமைச்சர் துரைமுருகன் என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,July 15 2023]

தளபதி விஜய் இன்று முதல் தமிழக முழுவதும் இரவு பாடசாலை தொடங்க இருப்பதை அடுத்து இது குறித்து அமைச்சர் துரைமுருகன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

‘விஜய் பயிலகம்’ என்ற பெயரில் ஜூலை 15 முதல் அதாவது காமராஜர் பிறந்த நாளிலிருந்து இரவு பாடசாலை தொடங்கப்படும் என விஜய் மக்கள் மன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் ’விஜய் பயிலகம்’ தொடங்கப்படும் என்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட நலத்திட்டங்களும் இன்று வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி சென்று படிக்க முடியாத ஏழை எளிய மாணவிகள் இந்த விஜய் பயிலகம் மூலம் படித்துக் கொள்ளலாம் என்றும் விஜய் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் துரைமுருகன் ’மக்களை நன்மதிப்பை பெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் இரவு பாடசாலை தொடங்குவது நல்லது தான்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

விபத்தில் துண்டான சிறுவன் தலை… மீண்டும் பொருத்தி புது சாதனையே படைத்த மருத்துவர்கள்!

இஸ்ரேல் நாட்டில் விபத்தில் துண்டான 12 வயது சிறுவனின் தலையை சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி மருத்துவர்கள்

முழுவதும் முடிந்தது 'லியோ' படப்பிடிப்பு.. லோகேஷ் எடுத்து கொண்டது எத்தனை நாள் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின்

விஜய் டிவி பிரபலத்தின் நிச்சயதார்த்தம்.. பொண்ணு முகத்தை காட்டாமல் ஒரு போட்டோஷூட்..!

விஜய் டிவி பிரபலத்தின் நிச்சயதார்த்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பெண்ணின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பாசிட்டிவ் விமர்சனம் எதிரொலி.. முதல் நாள் 'மாவீரன்' வசூல் இத்தனை கோடியா?

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான நிலையில் இந்த படம் ஏராளமான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

To a message he replied with a thumbs-up emoji, now he has to pay Rs 60 lakh

ஸ்மார்ட் போன் பயனாளர்களிடைய எமோஜிக்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன