'என் பேச்சை கேட்காதவர்களின் படம் வெற்றி பெறும்': அமைச்சர் துரைமுருகன்
Send us your feedback to audioarticles@vaarta.com
என் பேச்சைக் கேட்காமல் சினிமா எடுத்தவர்களின் படம் வெற்றி பெறும் என அமைச்சர் துரைமுருகன் காமெடியாக சினிமா விழா ஒன்றில் பேசி உள்ளார்.
சாந்தனு, ஆனந்தி, பிரபு நடிப்பில் உருவாகிய ’ராவண கோட்டம்’ என்ற திரைப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா துபாயில் நடந்தது. இந்த விழாவில் தமிழக அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசிய போது ’எனக்கு அரசியல் பற்றி நன்றாக தெரிந்தாலும் சினிமா பற்றிய நுணுக்கங்கள் தெரியாது. நாங்கள் தமிழ் மொழியை இலக்கியத்தை சேர சோழ பாண்டியரை மேடைதோறும் பேசி வருகிறோம், ஆனால் எங்கோ வயலில் இருக்கிறவர்களுக்கும் ராஜராஜ சோழனையும் ராஜேந்திர சோழனையும் கொண்டு போய் சேர்த்தவர் சரித்திர மகா புருஷர் சுபாஷ்கரன்.
அவர் ’பொன்னியின் செல்வன்’ கதையை படமாக எடுக்க போகிறேன் என்று என்னிடம் கூறிய போது நான் அந்த கதையை 10 முறை படித்தவன், அதனால் அது சினிமாவுக்கு சரியாக வராது என்று கூறினேன். ஆனால் அவர் என் பேச்சைக் கேட்காமல் ’தமிழுக்காக இந்த படத்தை தயாரிக்கிறேன்’ என்று கூறினார். அந்த படம் மகத்தான வெற்றி பெற்றது.
அதேபோல் என் பேச்சை கேட்காமல் தயாரிப்பாளர் கண்ணன் ரவி ’ராவண கோட்டம்’ என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ‘சினிமா என்பது கத்தியில் நடப்பது மாதிரி, நான் சினிமாக்காரர்களோடு பழகி இருக்கிறேன், வாழ்ந்து இருக்கிறேன், என் தலைவர் கூட சினிமாக்காரர் தான், என்னை வளர்த்த எம்.ஜி.ஆரும் சினிமாக்காரர் தான், ஆனாலும் நான் சினிமா எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout