ஸ்டாலின், ஓபிஎஸ் உடன் கமல் கூட்டணியா? அமைச்சர் ஜெயகுமார் சந்தேகம்

  • IndiaGlitz, [Thursday,July 20 2017]

உலக நாயகன் கமல்ஹாசனின் அரசியல் விஸ்வரூபம் ஆரம்பித்துவிட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களை கண்டால் நடுங்கும் நடிகர்களின் மத்தியில் கமல்ஹாசனின் ஒவ்வொரு அறிக்கையும் பேட்டியும், தமிழக ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது. ஊழல் குறித்து நேற்று கமல்ஹாசன் வெளியிட்ட விழிப்புணர்வு அறிக்கையால் மக்கள் கொதித்தெழுந்து தங்களுக்கு நேர்ந்த கசப்பான ஊழல் அனுபவத்தை அவர் கொடுத்த லிங்கிற்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த அறிக்கைக்கு தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் தற்போது பதிலளித்துள்ளார். அரசியலுக்கு வந்துவிட்டேன் என கூறும் கமல், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட எந்த பிரச்சனைக்காவது குரல் கொடுத்திருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஜெயகுமார், கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார்.

மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு கமல் நிரூபித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக கூறிய அமைச்சர், ஸ்டாலின், பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் கமல் ஆகியோர் கூட்டணி சேர்ந்து ஆட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.