விஜய் மீது வழக்கா? வழக்கறிஞருடன் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு

  • IndiaGlitz, [Thursday,November 08 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில காட்சிகள், வசனங்கள் குறித்து தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அரசு இலவசமாக கொடுத்த பொருட்களை தீயில் போடுவது போன்ற காட்சிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் சர்கார் படத்தின் தயாரிப்பாளர், விஜய், இயக்குனர் மற்றும் இந்த படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் அரசு தலைமை வழக்கறிஞரை தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளதாகவும், 'சர்கார்' பட விவகாரம் பற்றி முக்கிய ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விஜய் முருகதாஸ் ஆகியோர்களை கைது செய்ய வேண்டும் என்று தனியரசு எம்.எல்.ஏ கூறியிருக்கும் நிலையில் சட்ட அமைச்சர் தலைமை வழக்கறிஞரை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

அனுஷ்கா-மாதவன் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

கடந்த 2006ஆம் ஆண்டு மாதவன் நடித்த 'ரெண்டு' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அனுஷ்கா அதன் பின்னர் அருந்ததி', 'வேட்டைக்காரன்', 'சிங்கம்', 'பாகுபலி' உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

'மாரி 2' சாய்பல்லவியின் தரலோக்கல் கேரக்டர் இதுதான்

'பிரேமம்' படத்தின் மலர் டீச்சர் கேரக்டர் மூலம் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்ற சாய்பல்லவி, தற்போது தனுஷ் நடித்து வரும் 'மாரி 2' படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

'தேவர் மகன் 2': கமல்ஹாசனுக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எச்சரிக்கை

கமல்ஹாசன் நடித்த 'தேவர் மகன்' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி,

2 நாட்களில் அமெரிக்காவில் 'சர்கார்' செய்த மிகப்பெரிய சாதனை

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாகி ஓப்பனிங் வசூல் சாதனை செய்துள்ளது.

'சர்கார்' விஜய்க்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

வழக்கம் விஜய்யின் 'சர்கார்' படம் குறித்தும் அரசியல்வாதிகள் பாராட்டியும், விமர்சனம் செய்தும் பேச ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே ஒப்பனிங் வசூலில் கிங் என நிரூபித்துள்ள