அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் யார்? பொன்னையன் தகவல்

  • IndiaGlitz, [Saturday,December 10 2016]

மறைந்த செல்வி ஜெயலலிதா வகித்த வந்த அதிகாரம் மிக்க பதவியான அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என அதிமுகவின் கோடானு கோடி தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில் விரைவில் முறைப்படி புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று அதிமுகவின் அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, 'மக்களால் நான் மக்களுக்காகவே நான், உங்களால் நான் உங்களுக்காக நான் என்று வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா கோடானகோடி மக்களின் இதயத்தில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக-வை கட்டுக்கோப்பாக வளர்த்தவர் ஜெயலலிதா. அதிமுக ஆலமரம் போன்றது. ஒற்றுமை நிறைந்த ஜனநாயக இயக்கம் இது. இக்கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. பொதுச்செயலாளராக இவர் வருவார் அவர் வருவார் என்ற கூற்றுகள் அனைத்தும் வதந்தியே. அதிமுக-வின் பொதுச்செயலாளர் விரைவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்' என்று கூறினார்.

More News

'பாகுபலி' இயக்குனருக்கு ஆந்திர முதல்வர் வைத்த கோரிக்கை

இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'பாகுபலி'. கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படம் உலகம்...

'கருப்பு ராக்' ஆக மாறும் மொட்டை ராஜேந்திரன்

வில்லன் நடிகராக திரையுலகில் நுழைந்து தற்போது நகைச்சுவை வேடங்களில் வெளுத்து கட்டி வரும் 'மொட்டை' ராஜேந்திரன்...

'விஜய் 61' படத்தின் நாயகி குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 61' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' வெற்றி படத்தை அடுத்து இயக்குனர் விஜய், ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

புதுப்பொலிவுடன் ஜெயலலிதா நினைவகம் தயாராவது எப்போது?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.