அமைச்சருக்கு லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகள்:. சு.சுவாமி திடுக் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசு பணி ஒன்றின் அனுமதியை பெற அமைச்சர் ஒருவர் லஞ்சமாக இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்டால் அதற்கு என்ன தண்டனை என்று தான் ஆராய்ந்து வருவதாகவும், ஊழல் வழக்கு ஒன்றுக்காக இந்த தகவல் தேவைப்படுவதாகவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வேலை ஒன்றின் அனுமதிக்காக இரண்டு பாலிவுட் நடிகைகளை லஞ்சமாக கேட்கும் அமைச்சருக்கு ஊழல் தடுப்பு சட்டத்தில் என்ன தண்டனை உள்ளது என்பது குறித்த ஆலோசனையை தனக்கு வழங்க விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக உதவலாம் என்றும் சு.சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நெட்டிசன்கள் சு.சுவாமியிடம் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த அமைச்சர் யார்? அவர் எந்த கட்சியில் உள்ளார்? அந்த அமைச்சரிடம் இந்த கோரிக்கையை வைத்தது யார்? அந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் யார் யார்? என்பது குறித்த விபரங்களை வெளிப்படுத்துங்கள் என்று பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விபரங்களை சு.சுவாமி வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
I am researching the Prevention of Corruption Act to see if a Minister is culpable for prosecution if he asks for supply of two Bollywood actresses as bribe to clear a project. Has any PT have any suggestion? The answer has application on an ongoing corruption case
— Subramanian Swamy (@Swamy39) May 29, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments