அமைச்சருக்கு லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகள்:. சு.சுவாமி திடுக் தகவல்

அரசு பணி ஒன்றின் அனுமதியை பெற அமைச்சர் ஒருவர் லஞ்சமாக இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்டால் அதற்கு என்ன தண்டனை என்று தான் ஆராய்ந்து வருவதாகவும், ஊழல் வழக்கு ஒன்றுக்காக இந்த தகவல் தேவைப்படுவதாகவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு வேலை ஒன்றின் அனுமதிக்காக இரண்டு பாலிவுட் நடிகைகளை லஞ்சமாக கேட்கும் அமைச்சருக்கு ஊழல் தடுப்பு சட்டத்தில் என்ன தண்டனை உள்ளது என்பது குறித்த ஆலோசனையை தனக்கு வழங்க விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக உதவலாம் என்றும் சு.சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நெட்டிசன்கள் சு.சுவாமியிடம் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த அமைச்சர் யார்? அவர் எந்த கட்சியில் உள்ளார்? அந்த அமைச்சரிடம் இந்த கோரிக்கையை வைத்தது யார்? அந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் யார் யார்? என்பது குறித்த விபரங்களை வெளிப்படுத்துங்கள் என்று பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விபரங்களை சு.சுவாமி வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

முடிந்தது 'சிந்துபாத்' வியாபாரம்: விரைவில் ரிலீஸ் தேதி

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் அருண்குமார் இயக்கிய 'சிந்துபாத்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும்  போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் தற்போது ரிலிசுக்கு தயாராக உள்ளது.

ரஜினி-சிவா சந்திப்பு ஏன்? ஒரு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது போயஸ் தோட்ட வீட்டில் இன்று இயக்குனர் சிவா அவர்கள் சந்தித்து பேசினார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

நடிகர் சங்க தேர்தல் தேதி, இடம் அறிவிப்பு!

நடிகர் சங்கத்திற்கான தேர்தல் தேதியும், தேர்தல் நடைபெறும் இடமும் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலுக்கு 'நோ' சொன்ன தல அஜித்!

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில்

நிருபரின் ஜாதி பெயரை கேட்ட கிருஷ்ணசாமி: செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பின்போது நிருபர் ஒருவரின் பெயர் என்ன? ஊர் என்ன? ஜாதி என்ன? என்று கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது