தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,July 07 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும், 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கல்வியாண்டிலும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏற்கனவே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து விரைவில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதால் ஆகஸ்ட் முதல் வாரம் கல்லூரிகளும், ஆகஸ்டு இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் பள்ளிகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆசிரியர் சங்கத்தினர் மாணவர்கள் கல்வி நலனை முன்னிட்டு பள்ளிகளை திறக்கலாம் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கொரோனா தொற்றின் மூன்றாவது அறை குறித்து மருத்துவர்கள் ஆலோசனை பெற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் தகுந்த நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார். எனவே பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஹீரோவாகும் இயக்குனர் பிரபுசாலமன் மகன்: டைட்டில் அறிவிப்பு

கும்கி உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் மகன் ஹீரோவாகும் திரைப்படத்தின் டைட்டில் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்ஸ்டா மூலம் ஆசை வார்த்தை...! சிறுமியை ஏமாற்றிய இயக்குனர் கைது...!

17 வயது சிறுமியை நடிக்க வைப்பதாக கூறி, பாலியல் தொல்லை செய்த இயக்குனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் போற்றப்பட்ட ஒரு உன்னத முத்தம்? சுவாரசியப் புகைப்படம் வைரல்!

உலகம் முழுவதும் நேற்று (ஜுலை 6)ஆம் தேதி சர்வதேச முத்தத்தினம் கடைப்பிடிக்கப் பட்டது.

பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்… ஊரடங்கு தளர்வு குறித்து எச்சரிக்கும் WHO!

பெரும்பாலான உலக நாடுகள் தற்போது கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

கேப்டன்சி தல… தோனி பற்றி மறக்கவே முடியாத சில சுவாரசியச் சம்பவங்கள்!

இந்திய அணிக்காக 3 முறை ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தவர், இந்தியாவின் 28 ஆண்டுகால உலகக்கோப்பை கனவை நனவாக்கியவர்,