ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேவையான உதவிகளை செய்வேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் நேற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை சந்தித்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேவையான உதவிகளை செய்வேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்கள் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் ஆளாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் என்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி குறித்து விளக்கிக் கூறினார். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவதாகக் கூறி அவருக்கு உறுதியளித்தேன்’ என்று கூறியுள்ளார்.
தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் @arrahman அவர்கள் என்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் தான் முன்னெடுக்க இருக்கும் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் புதிய முயற்சி குறித்து விளக்கிக் கூறினார். 1/2 pic.twitter.com/9vdNREGTDh
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments