பிரபல மிமிக்ரி கலைஞரின் 2வது திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார் 

  • IndiaGlitz, [Monday,June 11 2018]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'கலக்க போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நவீன். கமல், அஜித், விஜய், விஜய்சேதுபதி, உள்பட பல குரல்களில் பேசி மிமிக்ரி செய்வதில் வல்லவரான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் அரக்கோணம் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டும் உள்ளது.

இந்த நிலையில் நவீன், முதல் திருமணத்தை மறைத்து மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்யவுள்ளதாக திவ்யாவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனது திருமணத்திற்கான ஆதாரங்களுடன் அவர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

இதனையடுத்து சென்னை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்று கொண்டிருந்த நவீன் - கிருஷ்ணகுமாரியின் திருமண வரவேற்பை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் நவீனை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.