பார்வையற்ற மாணவர்களை பறக்க வைத்த கபாலி-பைரவா நடிகர்

  • IndiaGlitz, [Thursday,June 22 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி', தளபதி விஜய் நடித்த 'பைரவா' படங்கள் உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர் மைம்கோபி பார்வையற்ற மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்து அவர்களுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். அந்த ஆசை பார்வையற்ற பலருக்கு வெறும் கனவாக இருந்து வரும் நிலையில் நடிகர் மைம்கோபி பார்வையற்ற மாணவர்கள் 19 பேர்களை சென்னையில் இருந்து மதுரைக்கு விமான பயணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். மதுரையில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்படும் அவர்கள் மீண்டும் சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் மைம்கோபி கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மைம்கோபி, 'ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற அந்த மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் இந்த விமான பயணத்தை ஏற்பாடு செய்ததாக கூறினார். மைம்கோபியின் இந்த மனிதாபிமான ஏற்பாடு திரையுலகினர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.

More News

விஜய்யின் சகோதர சகோதரி செண்டிமெண்ட் படங்கள்

இளையதளபதி விஜய் பேசும் வசனங்கள் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது 'அண்ணா' என்பது தான்.

ஸ்ரேயா ரெட்டியின் 'அண்டாவ காணோம்' இசை, டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த 'திமிறு', பிரகாஷ்ராஜ் நடித்த 'காஞ்சிவரம்', தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி...

கார்த்திக் சுப்புராஜ் - பிரபுதேவா படத்தின் நாயகி இவரா?

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படம் ஒன்று சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது...

மீண்டும் ஐரோப்பா செல்லும் அஜித்-விவேக் ஓபராய்

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தில் சர்வைவா பாடல் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் சுனாமியை கிளப்பிய நிலையில் இந்த படத்தின் டப்பிங் உள்பட அனைத்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இரவுபகலாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது...

விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல்' படக்குழுவின் 2வது இன்ப அதிர்ச்சி

தளபதி விஜய் நடித்து வரும் 61வது படத்தின் 'மெர்சல்' டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே...