பார்வையற்ற மாணவர்களை பறக்க வைத்த கபாலி-பைரவா நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி', தளபதி விஜய் நடித்த 'பைரவா' படங்கள் உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர் மைம்கோபி பார்வையற்ற மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்து அவர்களுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். அந்த ஆசை பார்வையற்ற பலருக்கு வெறும் கனவாக இருந்து வரும் நிலையில் நடிகர் மைம்கோபி பார்வையற்ற மாணவர்கள் 19 பேர்களை சென்னையில் இருந்து மதுரைக்கு விமான பயணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். மதுரையில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்படும் அவர்கள் மீண்டும் சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் மைம்கோபி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மைம்கோபி, 'ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற அந்த மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் இந்த விமான பயணத்தை ஏற்பாடு செய்ததாக கூறினார். மைம்கோபியின் இந்த மனிதாபிமான ஏற்பாடு திரையுலகினர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com