செல்போன் வேவு பார்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு… பெகாசஸ் வெளியிட்ட அதிரடி பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெகாசஸ் உளவுக் கருவிகள் உள்ளதால்தான் உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதாக அதனைத் தயாரித்த NSO நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தங்களது தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியது கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
பெகாசஸ் எனும் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், முக்கியப் பத்திரிக்கையாளர்கள் எனப் பலரின் செல்போன்களை மத்திய அரசு ஹேக் செய்து இருப்பதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து உண்மையிலேயே மத்திய அரசு இதுபோன்ற சாஃப்ட்வேர்களை வைத்து உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறதா? அல்லது பெகாசஸ் செயலியை மத்திய அரசு பயன்படுத்துகிறதா? என்பது தொடர்பான எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் பெகாசஸ் செயலி குறித்து இந்தியாவில் மட்டுமல்ல பிரானஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளும் குற்றச்சாட்டுகளை எழுப்பி உள்ளன. இது குறித்த விசாரணைக்கு இந்த நாடுகள் தனிக்குழுவை அமைத்து இருக்கின்றன. மேலும் பெகாசஸ் செயலியால் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது தொலைபேசியையும் தொலைபேசி எண்ணையும் மாற்றியுள்ளார்.
இந்நிலையில் பெகாசஸ் ஸ்பைவேர் பற்றிய சர்ச்சை இந்தியாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்எல்ஒ எனும் சைபர் செக்யூரிட்டி (NSO) நிறுவனம் தயாரித்த பெகாசஸ் செயலியை இதற்குமுன்பு வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற நாடுகள் வாங்கிப் பயன்படுத்துவதாகவும் இதனால் அந்நாடுகளில் உள்ள முக்கியப் பிரமுகங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றும் கடும் குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த வகையில் தற்போது பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உலக நாடுகள் இப்படி தொடர்ந்து பெகாசஸ் செயலி குறித்து சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் ஃபேஸ்புக் நிறுவனமும் இதற்கு முன்பு இச்செயலியைக் குறித்து வழக்கு தொடர்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout