ரசிகர்களின் இந்த செயலுக்கு நீங்கள் தான் பொறுப்பு: பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகும் போது அந்த நடிகரின் ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாலை திருடி கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கம் அதிகரித்ததால் இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அஜித்தின் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் நேற்றும் பல இடங்களில் பால் பாக்கெட்டுக்கள் திருடப்பட்டதாகவும், ஒரு சில இடங்களில் பால் என நினைத்து தயிர் திருடப்பட்டதாகவும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பால் முகவர் சங்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நேற்று வெள்ளிக்கிழமை நீங்கள் நடித்த வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைய எங்களது சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த காணொளி பதிவு உங்களுக்காகவே. ஏனெனில் கடந்த 2017ஆம் ஆண்டு நீங்கள் நடித்த விவேகம் திரைப்படம் வெளியானபோது உங்களை சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைக்க முயற்சித்தோம். உங்கள் ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் என்ற மாபெரும் சக்தியை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு உங்களைப் போன்ற நடிகர்கள் முன் வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உங்களை சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை .
இந்த நிலையில் நேற்று நீங்கள் நடித்த வலிமை திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ரிலீசின்போது உங்களது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வது உள்பட பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது பல்வேறு தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும். இதனால் பால் முகவர்கள் சங்கத்தினர் பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளனர்.
நேற்று வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் பாலாபிஷேகம் செய்வதற்கு சென்னை உள்பட பல இடங்களில் பால்கள் திருடப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் பால் என நினைத்து தயிர்கள் திருடப்பட்டுள்ளன. நீங்கள் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டதாக கூறி ஒதுங்கி விடமுடியாது. உங்களது ரசிகர்களின் செயலுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் ரசிகர்கள் கொடுக்கும் டிக்கெட் கட்டணம் தான் உங்களது திரைப்படத்தின் வியாபாரம் உறுதி செய்யப்படுகிறது. எனவே ரசிகர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்ய வேண்டியது ஒவ்வொரு நடிகரின் கடமை’ என்று பால் முகவர்கள் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments