என்கவுண்டர் போலீஸார் புகைப்படங்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் பெண்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர்களை இன்று அதிகாலை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த கொலையை நடித்துக் காட்ட கூறி சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றபோது நால்வரும் தப்பிக்க முயன்றதாகவும் இதனை அடுத்து வேறு வழியில்லாமல் அவர்களை என்கவுண்டர் செய்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இந்த நிலையில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நால்வரை என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. போலீசார் என்றாலே வெறுப்புடன் இருந்த பொதுமக்கள் இன்று திடீரென ஒரே நாளில் அவர்களை கொண்டாடி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு அந்த பாலியல் குற்றவாளிகள் மீது பொதுமக்களுக்கு ஆத்திரம் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கல்லூரி மாணவிகள் சிலர் காவல் ஆணையர் சஜ்ஜனார் அவர்களின் புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே பாலாபிஷேகம் செய்து வந்த இளைஞர்கள் தற்போது சமூக விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இதுதான் அருமையான நீதி பரிபாலனம்.
— பாரதி கண்ணம்மா...???? ஜெய் ஶ்ரீராம் (@vanamadevi) December 6, 2019
புறாவுக்காக தேகத்தின் ஒரு பாகத்தையே அரிந்து கொடுத்து தராசில் வழங்கிய சிபி சக்கரவர்த்தியும்,
கன்றுக்காக தன் மகனையே தேர் சக்கரத்தில் இட்ட மனுநீதி சோழனும் ஆண்ட தேசம்.
Justice delayed z justice denied.
கற்புநெறி வாழ் பெண்கள் மனதில் பால் வார்த்தீரய்யா pic.twitter.com/LBjj3jcTgT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments