26 வயது பெண்ணை காதலிக்கும் 52 வயது நடிகர்

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

தமிழில் அலெக்ஸ்பாண்டியன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகர் மிலிந்த் சோமன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் உள்ள நைட்கிளப் ஒன்றில் 26 வயது அங்கிதா என்பவரை சந்தித்தார்.

மகள் வயது உள்ள பெண்ணாக இருந்தாலும் பார்த்தவுடன் காதல் கொண்ட மிலிந்த், அவரிடம் தனது செல்போனை கொடுத்துவிட்டு வந்துள்ளார். மறுநாளே அங்கிதா, மிலிந்துக்கு போன் செய்ய பின்னர் இருவரும் நட்பாக பழகி தற்போது காதலித்து வருகின்றனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தனது வயதில் பாதி வயதே உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளவிருப்பதால் வரும் விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்த மிலிந்த், 'மற்றவர்கள் எங்கள் காதல் குறித்து என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து எனக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்களுக்கு எங்களை பற்றியும் எங்கள் காதல் பற்றியும் தெரியாது' என்று கூறியுள்ளார். 

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அங்கிதா ஒரு விமான பணிப்பெண் என்பதும் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சீமானை போல் பொய் சொல்பவரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை: வைகோ

கடந்த சில நாட்களாகவே சீமான் குறித்து வைகோ திடுக்கிடும் புகார்களை கூறி வருகிறார். பிரபாகரனை வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே சீமான் பார்த்ததாகவும்

எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு: பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.

புதிய வீடு புதிய சவால்கள்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை சென்னையிலிருந்து மாற்றி,

கமலாலய வாசலில் களமாடும் பத்திரிக்கையாளர்கள்

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், நேற்று தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து

எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயகுமார் விளாசல்

சமீபத்தில் தமிழக கவர்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.