52 வயது பிரபல நடிகரின் தேனிலவு கொண்டாட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகர் 52 வயது மிலிந்த் சோமன் சமீபத்தில் 26 வயது பெண் அங்கிதாவை திருமணம் செய்தார் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம். கடந்த மூன்று வருடங்களாக நட்புடன் பழகி டேட்டிங் செய்த வந்த இந்த காதல் ஜோடிக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் இந்த தம்பதியர் தற்போது ஹவாய் தீவில் தேனிலவு கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.
இன்னொரு புது வாழ்க்கையை தொடங்கியுள்ளதாக கூறியுள்ள மிலிந்த் சோமன், தங்களது அடுத்த கட்ட பயணம் குறித்த தகவலையும் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
நடிகர் மிலிந்த் சோமான் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout