இந்திய சினிமாவில் முதல்முறையாக நடிக்கும் மைக் டைசன்!

உலகம் முழுவதும் பிரபலமான குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் முதல் முதலாக இந்திய திரைப்படத்தில் அதுவும் தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ’லைகர்’ என்ற திரைப்படம் தமிழ் உள்பட பல மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துவருகிறார். மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், சார்மி கவுர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் மைக் டைசன் நடிக்க இருப்பதாகவும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இது குறித்த வீடியோ ஒன்றை விஜய் தேவர்கொண்டா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக இந்திய சினிமாவில் மைக்டைசன் நடிக்க இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சிம்புவின் 'மாநாடு' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’.

மனைவி குறித்து மோசமான கமெண்ட்: போலீஸில் புகார் செய்த தமிழ் நடிகர்!

தனது மனைவி குறித்து சமூக வலைத்தளத்தில் மோசமான கமெண்ட் செய்த நபர் குறித்து காவல்துறையில் தமிழ் நடிகர் ஒருவர் புகார் அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெஸ்ட் போட்டி-திடீர் ஓய்வை அறிவித்த மொயின் அலி… என்ன காரணம்?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர், வலது கை ஸ்பின் பந்து வீச்சாளரான மொயின் அலி சர்வதேச

சுற்றுலா தினத்தில் உலக அதிசயத்துடன், உலக அழகி வெளியிட்ட புகைப்படம்!

கடந்த 2012 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்” திரைப்படத்தின் மூலம் சினிமா

விமர்சனத்திற்கு இடையே டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி செய்த அசத்தல் சாதனை!

கேப்டன்சியில் சொதப்புகிறார், இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையைப் பெற்றுத்தரவில்லை