இந்திய திரைப்படத்திற்காக சொந்தக்குரலில் டப்பிங் பேசிய மைக் டைசன்: வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகும் திரைப்படத்திற்காக மைக் டைசன் டப்பிங் பேசி உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லைகர். தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார் என்பதும் ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிசர்மா இசையில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்டு 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் உலக புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ‘லைகர்’ படத்தின் தனது பகுதிக்கான டப்பிங்கை மைக் டைசன் தானே சொந்தக்குரலில் பேசி உள்ளார். அவர் டப்பிங் பேசும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout