விஜய், அஜித்துக்கு அது செட்டாகாது.. மைக் மோகன் கருத்து!

  • IndiaGlitz, [Monday,January 09 2023]

சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினி ஒருவருக்கு மட்டுமே என்றும் அந்த பட்டம் விஜய் அஜித்துக்கு செட் ஆகாது என நடிகர் மைக் மோகன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் பட்டம் கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்த்துக்கு அவரது ரசிகர்கள் கொடுத்துள்ள நிலையில் திடீரென தற்போது சூப்பர் ஸ்டார் விஜய் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் கூறியதை அடுத்து ஒரு சிலர் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் விஜய் தான் தற்போதைய வசூல் மன்னன் என்றும், எனவே அவர் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிறிய திரையரங்க திறப்பு விழாவில் நடிகர் மைக் மோகன் கலந்து கொண்டார். அவர் மாணவர்களிடம் பேசியபோது பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து அவர் கருத்து தெரிவித்த போது, ‘அஜித் விஜய் ஆகிய இருவருமே சூப்பர் ஸ்டார்கள் தான், ஆனால் பட்டம் என்று வரும்போது அது ரஜினி சாருக்கு மட்டும்தான் பொருந்தும், அந்த பட்டம் அவருக்காகவே கொடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது இயக்குனரின் கையில் தான் இருக்கிறது என்றும் நல்ல கதை இருந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

More News

பிக்பாஸ் 6: ஏழு போட்டியாளர்களில் பணப்பெட்டியை யார் எடுக்க வாய்ப்பு?

 பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு கட்டத்தில் இருக்கும் நிலையில் இன்னும் ஒரே ஒரு வாரத்திற்கு பின்னர் இறுதி நிகழ்ச்சி நடைபெறும் . இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் பணப்பெட்டி அனுப்பப்படும்

சகுந்தலாவின் பிறப்பிற்கு ஒரு காரணம் உண்டு: சமந்தாவின் 'ஷாகுந்தலம்' டிரைலர்

 சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த 'ஷாகுந்தலம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

'துணிவு' ஸ்பெஷல் காட்சி பார்த்த ஷாலினி அஜித்.. ரியாக்சன் என்ன?

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை நேற்று அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் பார்த்தார்.

'வாரிசு' தெலுங்கு ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு.. 2 முக்கிய காரணங்கள்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு

என்னது விக்ரமனை நாமினேட் பண்ணலையா?

இந்த சீசனின் கடைசி நாமினேஷன் இன்று நடந்த நிலையில் விக்ரமனை அசீம் நாமினேட் செய்யாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.