வறுமை காரணமாக ரூ.45 ஆயிரத்திற்கு பிஞ்சு குழந்தையை விற்ற புலம்பெயர் தொழிலாளி!!! அதிர்ச்சி தகவல்!!!

  • IndiaGlitz, [Saturday,July 25 2020]

 

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். அதிலும் சொந்த மாநிலத்தை விட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் பாடு அதைவிட கொடுமையாக இருக்கிறது. அசாம் மாநிலம் கோக்ரஜார் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் பிரம்மா. இவர் பல ஆண்டுகளாக குஜராத்து மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து வேலை செய்து வந்திருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக குஜராத்தில் இருந்து தனது சொந்த ஊரான கோக்ரஜாருக்கு சென்றிருக்கிறார். அங்கும் சொந்த வீடு இல்லாத நிலையில் உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார்.

பல இடங்களில் வேலையைத் தேடியிருக்கிறார். எவ்வளவு முயன்றும் எந்த வேலையும் கிடைக்காத நிலையில் விரக்தியில் இருந்திருக்கிறார். அந்நேரத்தில் அவருடைய மனைவிருக்கு 2 ஆவதாக பெண் குழந்தைப் பிறந்திருக்கிறது. இதனால் மேலும் செலவு அதிகரித்து இருக்கிறது. நிலைமையை சமாளிக்க முடியாமல் 2 பெண்களுக்கு தன்னுடைய பச்சிளம் குழந்தையை விலை பேசி விற்றிருக்கிறார் தீபக். விஷயத்தை தெரிந்து கொண்ட அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். தற்போது போலீஸார் குழந்தைகளை மீட்டு குழந்தைளை விற்ற தகப்பனார் மற்றும் வாங்கிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.