அகதியாக தஞ்சம் அடைந்தவருக்கு ஹெலிகாப்டரில் பிரசவம்!!! பரபரப்பு தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,September 03 2020]

 

இத்தாலிக்கு அகதியாக வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பல்லாயிரக் கணக்கான அடி உயரத்தில் பறந்த ஹெலிகாப்டரில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தாலி நாட்டிடன் தஞ்சம் அடைந்த அப்பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அகதிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள சிசிலி தீவின் தடுப்பு மையத்தில் அப்பெண் தங்கவைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் சிசிலி தீவில் இருக்க வேண்டிய எண்ணிக்கையைவிட 10 மடங்கு அதிக மக்கள் தங்கவைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இக்கட்டான நெருக்கடியில் இருந்து நல்ல முறையில் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது என அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதனால் சிசிலி தீவில் இருந்து பலெர்மோ என்ற இடத்திற்கு அழைத்து செல்ல ஹெலிகாப்டர் வந்திருக்கிறது. சிசிலிக்கும் பலெர்மோவிற்கும் அரை மணி நேர பயணம் என்றாலும் அந்த இடைவெளியில் அப்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு ஹெலிகாப்டரிலேயே குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது பலெர்மோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கும் அப்பெண் அவளுடைய குழந்தையுடன் நல்ல உடல்நிலையில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆண்டுதோறும் இத்தாலியில் தஞ்சம் கோரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 இல் 5200 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது கொரோனா காலக்கட்டத்தில் 19 ஆயிரத்து 400 ஆக அதிகரித்து இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. கொரோனா போன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் தஞ்சம் கோரும் மக்களுக்கு மேலும் அதிகச் சிரமங்கள் ஏற்படுவதாக ஐ.நா. சபையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.