குழந்தைக்கு 'லாக்டவுன்' என பெயர் வைத்த பெற்றோர்கள்: குவியும் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ’லாக்டவுன்’ பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி திரிபுரா மாநிலத்தில் சஞ்சய் மற்றும் மஞ்சு என்ற தம்பதிக்கு குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தை ’லாக்டவுன்’ நேரத்தில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு ’லாக்டவுன்’ என்றே அதன் பெற்றோர்கள் பெயர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சஞ்சய் கூறியபோது ராஜஸ்தானில் இருந்து தான் திரிபுராவுக்கு வேலை நிமித்தமாக வந்ததாகவும், இங்கு பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை செய்வதாகவும் இந்த லாக்டவுன் நேரத்தில் இங்கு உள்ள அரசு தங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.
இந்த நிலையில் ’லாக்டவுன்’ நேரத்தில் எனது மனைவிக்கு குழந்தை பிறந்ததால் இருவரும் சேர்ந்து அந்த குழந்தைக்கு ’லாக்டவுன்’ என்ற பெயர் வந்ததாகவும் கூறியுள்ளார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் ’லாக்டவுன்’ குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் ஆந்திர மாநிலத்தில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு ’கொரோனா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள தாளபள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு ’கொரோனா’ என்று பெயரை பெற்றோர்கள் வைத்துள்ளார்கள். கொரோனா நேரத்தில் ’லாக்டவுன்’ பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ’கொரோனா’ மற்றும் ’லாக்டவுன்’ என்று குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது ஊடகங்களில் பரபரப்பான வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments