'மிக மிக அவசரம்' ரிலீஸில் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Thursday,October 10 2019]

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகிய ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் நாளை வெளியாக திட்டமிடப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஒரு பெண் போலீஸ் அனுபவிக்கும் இக்கட்டான பிரச்சனைகளை இயக்குனர் மிகவும் அழுத்தமாக இந்த படத்தில் கூறியிருப்பதாக இந்த படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில் நாளை வெளியாக வேண்டிய ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ மற்றும் ‘அசுரன்’ ஆகிய திரைப்படங்கள் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி நாளை சித்தார்த்தின் ‘அருவம்’, தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ மற்றும் யோகிபாபுவின் ‘பப்பி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாவதால் ‘மிக மிக அவசரம்’ திரைப்படத்திற்கு எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

More News

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 'காலா' வில்லன்!

ஜெயம்ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது

மணிரத்னம் மீதான தேசத்துரோக வழக்கு: பீகார் போலீஸின் அதிரடி முடிவு

மணிரத்னம் உள்பட 49 திரையுலக பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய சமீபத்தில் பீகார் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்

தங்கர்பச்சான் அடுத்த படத்தின் டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் அவர்கள் தனது மகனை ஹீரோவாக்கி ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும்

சித்தார்த் நடித்த 'அருவம்' சென்சார் தகவல்கள்

சித்தார்த் நடித்த 'அருவம்' திரைப்படத்தின் புரமோஷன் வீடியோக்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக உணவுக்கடைகள் சீல் வைக்கப்படும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

வனிதா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சேரன் - லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருந்தவர் வனிதா. மற்றவர்களை பேசவிடாமல் தான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாலும் அவர் கூறுவதில் நியாயம் இருக்கும்