கடைசி நேரத்தில் ஒரு மிட்வீக் எவிக்சன்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் கடைசி வாரம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தில் ஏற்கனவே எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் மீண்டும் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இதுவரை அனன்யா, வினுஷா, அக்சயா உள்ளிட்டோர் வந்திருக்கும் நிலையில் விக்ரம் சரவணன் உள்பட சில போட்டியாளர்கள் அடுத்தடுத்து வரவுள்ளனர்.
இந்த நிலையில் திடீரென கடந்த சில வாரங்களுக்கு முன் மிட்வீக் எவிக்சன் செய்த பிக்பாஸ், இந்த கடைசி வாரத்திலும் திடீரென மிட்வீக் எவிக்சன் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் ஆறு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் விஜய் வர்மா எலிமினேஷன் செய்யப்பட்டு இருப்பதாகவும் இதுகுறித்த காட்சிகள் இன்றைய எபிசோடில் வரும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் வர்மா எலிமினேஷன் செய்யப்பட்டு மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த நிலையில் தற்போது அவர் கடைசி நேரத்தில் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து மீதமுள்ள 5 போட்டியாளர்களும் இறுதிப் போட்டிக்கு செல்வார்களா? அல்லது மீண்டும் மிட்வீக் அல்லது வார இறுதி எவிக்சன் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
கடைசி நேரத்தில் கூட பிக் பாஸ் சில திருப்பங்களை ஏற்படுத்தி வருவதை அடுத்து பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பு அதிகரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com