இரண்டாக மடித்து வைக்கும் முதல் ஸ்மார்ட்போன்- மைக்ரோசாப்ட்டின் புது அறிமுகம்!!!
- IndiaGlitz, [Thursday,August 13 2020]
முதல்முறையாக மடித்து வைக்கும் ஸ்மாட்போனை தயாரிக்க இருக்கிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் இன்று வெளியிட்டு இருக்கிறது. வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டாக மடித்து வைக்கும் முறையிலான ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அதன் பெயர் சாபேஸ் டூயோ எனவும் தெரியவந்துள்ளது. இதில் இரண்டு ஸ்கிரீன் வைக்கப்பட்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள் - இரண்டு 5.6 இன்ச் OLED 1350×1800 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப் டிராகன் 855 பிராசஸர், 6 ஜிபி ரேம் இதில் அடங்கும். அதைத்தவிர இதன் மெமரி 256 ஜிபி என்பதும் ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. இதன் பிரைமரி மெமரி 11 எம்.பி யாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 3,577 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாக இந்த செல்போன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 4 ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் வசதி யுஎஸ்பி வசதியும் அடங்கும். டைப் சி ஜார்ஜர், பிரத்யேகமான ஸ்டைல் போன்றவையும் இந்த செல்போனின் சிறப்பம்சங்களாக கூறப்பட்டுள்ளது. இதன் விலை 1,399 டாலர் என மைக்ரோசாப்ட் நிறுவனம் என நிர்ணயித்து இருக்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ.1,04,600 என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் முதல் விற்பனை வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி அமெரிக்காவில் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.